2024 க்குப் பின் மோடி பிரதமராக இருக்கமாட்டார்- முதல்வர் நிதிஸ்குமார்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (17:22 IST)
பாஜக கூட்டணியில் இருதது விலகிய பின் முதல்வர் நிதிஸ்குமார் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

பாஜக கூட்டணியிலிருந்து பீகார் மா நிலத்தில்,  முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது.

சமீபகாலமாகவே  நிதிஸ்குமாருக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில், பாஜக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும், பிரதமர் மோடி தலைமையிலான நிடி அயோக் நிகழ்ச்சியையும் அவர் புறக்கணித்தார். இதற்கு பாஜகவின் விமர்சித்தனர்.

கூட்டணியில் இருந்து வெளியே வருவதற்காக நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார் இன்று எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகி உள்ளார்

லாலு பிரசாத் யாதவ் கட்சியின் ஆதரவோடு முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார், மீதமுள்ள முழுமையான ஆண்டுகளில் பதவி வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார் மாநில முதல் அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றுள்ள்ளார் நிதிஸ்குமார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:”  ஜனதா தளம் பாஜகவுடனான கூட்டணியை விரும்பவில்லை. அதனால் கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. பாஜக 2014ல் ஆட்சிக்கு வந்தாலும் 2024 ல் வெற்றி பெறாது. 2024குப் பின் பிரதமர்  மோடி பிரதமராக இருக்க மாட்டார். வரும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும்  ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்