எனக்கும், என் அம்மாவுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்! திமிரு பட வில்லன் மீது மீடூ புகார்!

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (13:00 IST)
விஷாலின் திமிரு படத்தில் வில்லி ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக ஒரு காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மலையாள நடிகர் விநாயகன். மேலும் மலையாளத்தில் துல்கர் சல்மானின் ‘களி’, ‘கம்மட்டி பாடம்’, தனுஷின் ‘மரியான்’, சீயான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

இவர் சில நாட்களுக்கு முன்னர் பிஜேபிக்கு எதிரான கருத்தைக் கூறினார் என்பதற்காக, சோசியல் மீடியாவில் நிறம் மற்றும் சாதிய ரீதியாக பெரும் தாக்குதலுக்கு ஆளானார். இதன் எதிரொலியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவி என்பவர் விநாயகன் மீது பாலியல் (மீடூ) குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.
 
இதைப்பற்றி கேரள சமூக ஆர்வலர் மிருதுளா தேவி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது, "நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அழைத்த போது, போனில் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் , 'என்னை மட்டுமல்லாது என்னுடைய தாயையும் அவர் விருப்பத்திற்கேற்றபடி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என விநாயகன் மோசமாக பேசியதாக கூறி பெரும் பரம்பரைபை ஏற்படுத்தியுள்ளார். 
 
அதேசமயம் அவர் மீதான சாதிய, நிறவெறி தாக்குதல் குறித்து தான் மிகவும் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார் மிருதுளா தேவி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்