கூகுள் தேடலில் முதலிடத்தை பிடித்த மெர்சல்!!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (15:05 IST)
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100 வது படமாக மெர்சல் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. 


 
 
படத்திற்கு எ.ஆர், ரகுமான் இசைமதுள்ளார். சாமிபத்தில் மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியானது. பாடல் வெளியானது முதலே சமூக வலைதளங்களை விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டனர். 
 
இந்நிலையில், கடந்த வாரத்தில் கூகுள் தேடலில் அதிகளவில் தேடப்பட்டதில் `மெர்சல்' முதலிடத்தை பிடித்திருக்கிறது என கூலுள் அறிவித்துள்ளது. 


 

 
அதனைதொடர்ந்து லூனார் எக்ளிப்ஸ், ரக்ஷா பந்தன் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருப்பதாக கூகுள் இந்தியா அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது. 
அடுத்த கட்டுரையில்