'மெர்சல்' பேனர்கள் அகற்றம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (11:59 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வருமா? வராதா? என்று கடைசி நேர டென்ஷனில் படக்குழுவினர் இருந்தாலும், ரசிகர்கள் நம்பிக்கையுடன் பேனர்கள், போஸ்டர்கள் கட்-அவுட்டுக்கள் ஆகியவற்றை திரையரங்குகளில் வைத்து வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் புதுச்சேரியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 'மெர்சல்' பேனர்களை நகராட்சி நிர்வாகம் அதிரடியாக அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
 
இதனையறிந்த விஜய் ரசிகர்கள் உடனே ஒன்றுகூடி நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி அரசு அலுவலக கட்டிடங்களில் பேனர்கள் வைத்தது தவறு என்று கூறி விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்