மெய் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா!!

J.Durai
சனி, 20 ஜூலை 2024 (14:44 IST)
திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகமும் இணைந்து"மெய்" சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா  சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
 
கடந்த  இரண்டு ஆண்டுகளாக மாதந்தோறும் நடைபெற்று  வரும் இந்த திரைப்பட விழாவினை அதன் நிர்வாக இயக்குநர் ஜெயசீலன்  மற்றும்  P.அன்பழகன் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
 
இந்த விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு கூழாங்கல் திரைப்படம் திரையிடப்பட்டது.
 
இதனை தொடாந்து இயக்குனரும் நடிகருமான  பார்த்திபன் மற்றும் வசந்த பாலன் ஆகியோர்  படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தனர். 
 
சிறந்த இயக்குனருக்கான விருதை  கூழாங்கல் திரைப்படத்திற்கு P S வினோத் ராஜ்.
 
சிறந்த திரைப்பட விருது "கிடா" படத்திற்காக 
ரா.வெங்கட்
 
சிறந்த பாடகி சித்தா திரைப்படத்தின்  (கண்கள் ஏதோ) பாடலுக்கு கார்த்திகா வைத்தியநாதன்.
 
சிறந்த வில்லன் சித்தா தினப்படத்தின படத்தின்  தர்ஷன் 
 
மகேந்திரன் கனேசன் சிறந்த படத்தொகுப்பாளர் - யாத்திசை திரைப்படம்.
 
இரஞ்சித் குமார்  சிறந்த கலை இயக்குனர்  யாத்திசை திரைப்படம்.
 
மதன் - சிறந்த குணச்சித்திர நடிகர்  ரணம் அறம் தவறேல் திரைப்படம்.
 
அம்மு அபிராமி - சிறந்த நடிகை - கண்ணகி திரைப்படம்
 
சேத்தன் - சிறந்த நடிகர் - விடுதலை பாகம் 1 திரைப்படம்
 
பாக்கியம் ஷங்கர் - சிறந்த நடிகர் - துணைக்கதாப்பாத்திரம் மாடர்ன் லவ் சென்னை.
 
பிருத்வீராஜன் - சிறந்த குணச்சித்திர நடிகர் - புளூ ஸ்டார் திரைப்படம்
 
தமிழ் அழகன் – சிறந்த ஒளிப்பதிவாளர் - புளூ ஸ்டார் திரைப்படம்
 
Lights on Media - சிறந்த தயாரிப்பாளர் - பருந்தாகுது ஊர்க்குருவி
 
செல்வா - சிறந்த போஸ்டர் வடிவமைப்பாளர் - பிதா
 
விருது  வழங்கியதை தொடர்ந்து 
இயக்குநர் பார்த்திபன் பேசியதாவது…...
 
மெய்யாலுமே சினிமாவில் இருப்பது தான் என் சந்தோசம் அந்த வகையில் மெய் நடத்தும் இந்த விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. 
 
விருது என்பது முத்தம் கொடுப்பது மாதிரி விருது வழங்குவதும், பெறுவதும் சந்தோசம் தான். 
 
விருது வாங்கியவர்களுக்கு என் வாழ்த்துக்கள். என் முன்னால் இருக்கும் V வெற்றியைக் குறிக்கும், வசந்த பாலனைக்குறிக்கும், வேல்ஸ் குழுமத்தைக் குறிக்கும். திரைப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் மெய் குழுவின் உழைப்பிற்கும், இதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் வேல்ஸ் பல்கலைகழகத்திற்கும் என் வாழ்த்துக்கள். விருது வாங்கிய அனைத்து படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்.
 
இதையடுத்து பேசிய  இயக்குநர் வசந்தபாலன்.......
 
மெய் குழுவினர் தமிழ் திரைப்படைப்பாளிகளுக்கு விருது வழங்குவது மகிழ்ச்சி.  கூழாங்கல், ப்ளூஸ்டார், கலைஞர்கள் எனக் கடந்த ஆண்டு நான் நேசித்த அனைவருக்கும் தேடித் தேடி விருது அளித்திருப்பது மிக மகிழ்ச்சி. 
 
இந்த விருது மிகப்பெரிய அங்கீகாரம் அது தான் படைப்பாளிகள் தொடர்ந்து ஓட ஊக்கமாக இருக்கிறது. 
 
வெயில் படத்திற்குக் கிடைத்த விருதுகள் தான் என்னை ஓட வைத்தது. இந்த விருது விழாவை ஒருங்கிணைத்த மெய் குழுவினருக்கும் மற்றும் வேல்ஸ் பல்கலை கழகத்திற்கும் என் நன்றி என்றார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்