நாளை மாணவர்களுக்கு பாராட்டு விழா.. திடீரென காவல் நிலையத்தில் மனு அளித்த தவெக நிர்வாகி..!

Siva

வியாழன், 27 ஜூன் 2024 (20:05 IST)
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு முதல் கட்டமாக நாளை சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. 
 
இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். 
 
நாளை விஜய் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் அதிக அளவு கூட்டம் சேரும் என்பதால் அதற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த மனுவை பரிசீலனை செய்து நாளை நடைபெறும் விழாவுக்கு காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்