ரஜினிக்கு ஜோடியான மீரா மிதுன்? நம்பவே முடியாத ரகசிய உண்மை

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (11:52 IST)
மோசடி விவகாரத்தில் சிக்கிய சர்ச்சை நாயகி மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அடுத்தடுத்து பல ரகளையை செய்துவந்தார். எப்போதும் எல்லோரிடமும் சண்டையிட்டு சக போட்டியாளர்களிடமும் மக்களிடமும் வெறுப்பை சம்பாதித்த மீரா மிதுன்,  சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்தியதால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 


 
இந்நிலையில் தற்போது கேட்பவர்கள் அனைவரும் ஷாக்காகும் அளவிற்கு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,  பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மீரா மிதுனுக்கு  வாய்ப்பு கிடைத்ததாம். பின்னார் ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட மீரா மிதுன், லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்டார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு இவருக்கு கைகூடாமல் போய்விட்டது. 


 
அதன் பின்னர் அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் த்ரிஷா நடித்தார். இதுவரை வெளிவராத இந்த ரகசிய தகவலை கேள்விப்பட்ட நெட்டிசன்ஸ்,  "இன்னும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தால் மீராவை கையிலே பிடித்திருக்க முடியாது" என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்