நீண்ட இடைவெளிக்கு பின் மீரா ஜாஸ்மின் நடிக்கும் புதிய படம்: டைட்டில் அறிவிப்பு..!

புதன், 15 பிப்ரவரி 2023 (16:04 IST)
நீண்ட இடைவெளிக்கு பின் மீரா ஜாஸ்மின் நடிக்கும் புதிய படம்: டைட்டில் அறிவிப்பு..!
நடிகை மீரா ஜாஸ்மின் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விஜய் நடித்த புதிய கீதை, மாதவன் நடித்த ரன், விஷால் நடித்த சண்டக்கோழி உள்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிறகு மீண்டும் தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
 
மீரா ஜாஸ்மின் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு விமானம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் போஸ்டர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்