நடிகர் விஜய்யின் ‘லியோ’ பட டைட்டில் போஸ்டர் வெளியீடு

வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (22:22 IST)
நடிகர் விஜய்யின் ‘லியோ’ பட டைட்டில் போஸ்டரை இயக்குனர் லோகேஷ்  கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் வாரிசு படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்து வரும் விஜய்67 படத்தின் டைட்டில் மற்றும், புரொமோ வீடியோ இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த வீடியோ மாலை 5 மணிக்கு வெளியாகி வைரலானது, இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இந்த நிலையின் லியோ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தற்போது   வெளியிட்டுள்ளார்.

விஜய்யுடன் இணைந்து இப்படத்தில்  த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

#LEO pic.twitter.com/O2Xsq2GxCS

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 3, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்