பிக்பாஸ் சீசன் 7 தொடங்க்குவது எப்போது? கசிந்த தகவல்!

புதன், 12 ஜூலை 2023 (09:50 IST)
பிக்பாஸ் தமிழ் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இப்போது ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார்.

விரைவில் சீசன் 7 க்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் இதற்கான ப்ரமோஷன் வீடியோ ஷூட்டிங் நடந்ததாகவும், அதில் கமல்ஹாசன் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து பிக்பாஸ் சீசன் 7 அக்டோபர் 8 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீசனை தொகுத்து வழங்குவதற்காக கமல்ஹாசனுக்கு மொத்தம் 130 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்