வாரணம் ஆயிரம் ஹீரோயினா இது? முகமெல்லாம் வீங்கி அடையாளமே தெரியாமல் இருக்காங்களே!

வியாழன், 13 ஜூலை 2023 (11:05 IST)
1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில்  துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு   கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமானார். 
 
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். 
பிறகு திருமணமான  ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பிற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதையே நிருத்திக்கொண்ட சமீரா ரெட்டிக்கு தற்போது 44 வயதாகிறது. அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் சமூகவலைத்தளத்தில் வெளியிட ரசிகர்கள் எல்லோரும் செம ஷாக் ஆகிவிட்டார். வாரணம் ஆயிரம் படத்தில் செம பிகர் என ரசிகர்களால் ரசிக்கப்பட்ட சமீரா தற்போது படு குண்டாக முகமெல்லாம் வீங்கி ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்