நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும் - பூமி பட இயக்குநர் டுவீட்

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (21:39 IST)
நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும் என்று  பூமி படத்தின்  இயக்குநர் லட்சுமனன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகருக்கு பதிலளித்துள்ளார்.

ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படம் தீபாவளியை ஒடிடி யில் ரிலீஸாக இருந்தது. ஆனால் திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து பாக்யராஜ் தலைமையிலான குழு அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என அறிவித்து உதவி இயக்குனருக்கு கடிதம் கொடுத்தது. இந்நிலையில் இது சம்மந்தமான பஞ்சாயத்து இப்போது படம் பொங்கலை முன்னிட்டு ஒடிடி தளத்தில் ரிலீஸாகி உள்ளது.

இந்நிலையில்  ஜெயம் ரவியின் பூமி படம் தற்போது, ஹாட்ஸ்டார்ப்ளஸ் டிஸ்னி ஓடிடி  தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விவசாயத்தைப் பற்றி உரத்துப் பேசுவதால் மக்கள் பெருவாரியாக இப்படத்தைப் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில்,  நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும் என்று இப்படத்தின் இயக்குநர் லட்சுமனன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகருக்கு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சார் நான் எடுத்தது எந்த படம்  பண்ணனுன்னு எல்லாரும் பியூட்சர் தலைமுறை நல்லாயிருக்கனுமேனு நினைச்சேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். புரோ ரோமியோ ஜூலியட் படம் எடுத்த எனக்கு கமர்சியல் படம் எடுக்கத்தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் புரோ நீங்க சூப்பர் புரோ யூ வ்ன் லூஸ் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்