மாவீரன் படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்?

சனி, 27 மே 2023 (08:10 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறையைக் கணக்கில் வைத்து ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நாளில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் இப்போது ஜூலை 14 ஆம் தேதிக்கு முன் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது என சொல்லப்பட்ட நிலையில் இப்போது அந்த முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போது புதிய விநியோகஸ்தரை மாவீரன் படக்குழு தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது மாவீரன் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்