ரோட்டர்டாமில் செம ரெஸ்பான்ஸ்.. பாராட்டு மழையில் குளிக்கும் விடுதலை 1&2!

Prasanth Karthick
வியாழன், 1 பிப்ரவரி 2024 (11:09 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வெளியான “விடுதலை” படத்திற்கு ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



இந்த புத்தாண்டு நடிகர் சூரிக்கு புத்துயிர்ப்பான ஆண்டாக மலர்ந்துள்ளது. காமெடி நடிகராக மட்டுமே அறியப்பட்டு வந்த சூரி, சமீபத்தில் வெற்றிமாறனின் “விடுதலை” படத்தில் நடித்ததன் மூலமாக அடுத்தடுத்து பல படங்களில் சீரியஸான ஹீரோ பாத்திரங்களையும் ஏற்று நடிக்க தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் சூரி நடித்துள்ள விடுதலை 1 மற்றும் 2, கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை என 3 படங்களும் ரோட்டர்டாம், வெனிஸ் என பல நாட்டு உலக திரைப்பட விழாக்களில் தேர்வாகி பங்கேற்று வருகிறது.

ALSO READ: நாகேஷ் குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறை நடிகர்… ஹீரோவாக அறிமுகம் ஆகும் பிஜேஷ் நாகேஷ்!

தற்போது நெதர்லாந்தில் நடந்து வரும் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் “விடுதலை 1 மற்றும் 2” ஆகிய படங்கள் திரையிடப்பட்ட நிலையில், படம் முடிந்ததும் ஆடியன்ஸ் எழுந்து தொடர்ந்து 5 நிமிடங்கள் கைத்தட்டி விடுதலை படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர். உலக திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரத்தால் திக்குமுக்காடி போயுள்ளாராம் நடிகர் சூரி.

இதேபோல கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை படங்களுக்கு வரவேற்பு கிடைக்கும் நிலையில் அடுத்து பேன் இந்தியா, பிற மொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகள் சூரி வீட்டுக் கதவை தட்டுவது உறுதி என பேசிக் கொள்ளப்படுகிறது சினிமா வட்டாரங்களில்..

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்