மார்வெலின் அடுத்த அதிரடி.. ஒன்று சேரும் வில்லன்கள் கூட்டணி! - Thunderbolts ட்ரெய்லர்!

Prasanth Karthick
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (13:15 IST)

மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் ஒன்றான தண்டர்போல்ட்ஸ் (Thunderbolts) படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

 

 

சூப்பர் ஹீரோ படங்கள் பலவற்றை தயாரித்து உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளது மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம். சமீபத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்ட ‘டெட்பூல் அண்ட் வுல்வரின்’ படம் உலகளவில் பெரும் வசூல் சாதனையை படைத்தது. அதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களை வெளியிட உள்ள மார்வெல் ஸ்டுடியோஸ் தற்போது ‘தண்டர்போல்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.

 

அவெஞ்சர்ஸில் முக்கியமானவரான நடாஷாவின் தங்கையான யெலீனா அடுத்த ப்ளாக் விடோவாக இந்த படத்தில் மாறுகிறார். US Agent ஜான் வாக்கர் முழுநீள படத்தில் தோன்ற உள்ளார். இதுமட்டுமல்லாமல் ஆண்ட்மேன் படத்தில் வில்லியாக வந்த கோஸ்ட் (அவா ஸ்டார்), கேப்டன் அமெரிக்காவின் நண்பன் பக்கி பர்னேஸ் (விண்டர் சோல்ஜர்) மற்றும் டாஸ்க் மாஸ்டர் உள்ளிட்ட முக்கியமான கதாப்பாத்திரங்கள் இணைந்து செய்யும் சாகசமாக இந்த படம் உருவாகியுள்ளது.

 

இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து மார்வெலில் வரவுள்ள அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே உள்ளிட்ட படங்களுக்கு முன் தயாரிப்பாக இந்த படங்கள் உள்ளதால் ‘தண்டர்போல்ட்ஸ்’ குறித்து ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் 2025 மே 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்