மாரி செல்வராஜின் ‘வாழை’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடி?

Siva
புதன், 11 செப்டம்பர் 2024 (18:01 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான உண்மை சம்பவத்தின் அடிப்படையை கொண்ட வாழை திரைப்படத்தை சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் பாராட்டினார் என்பதும் குறிப்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ‘வாழை’ படத்தை பார்த்து அறிக்கை வெளியிட்டார் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் திரையரங்குகளில் வசூலை வாரி குவித்த வாழை திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்த போஸ்டரும் வெளியாகிய இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திரையரங்கை போலவே ஓடிடியிலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்