கூலி படத்துல இதான் பிரச்சன.. லோகேஷுக்கு மெஸேஜ் பண்ணிட்டேன் – மன்சூர் அலிகான்!

vinoth

புதன், 27 ஆகஸ்ட் 2025 (09:07 IST)
தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தைய சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய ‘கூலி’ படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு ‘பில்டப்’ கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் படம் வெளியான முதல் காட்சியில் இருந்தேக் கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. விமர்சனங்கள் வசூலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஏனென்றால் படம் வெளியாகி 10 நாட்களில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த படம் பற்றி ரசிகர்களிடம் இருந்து நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் இயக்குனர் லோகேஷுக்குப் பிடித்த நடிகரான மன்சூர் அலிகானும் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அதில் “கூலி படம் பார்த்தேன். முதல் பாதி தொய்வா இருந்தது. லோகேஷுக்கு மெஸேஜ் பண்ணேன். டைட்டில் முதற்கொண்டு படத்தோட கதை வரை எல்லாமே பழசாக இருந்தது. அங்கதான் தப்பாகிவிட்டது. லோகேஷ்னா ஒரு பவர் இருக்கணும்னு அனுப்பினேன். அத அவர் பார்த்தாரே என்னன்னு தெரில. எந்த பதிலும் இல்ல” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்