இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் கணவருடன் தனியாக வசித்து வருகிறார். தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார். கொரோன லாக்டவுன் சமயத்தில் ஷட்டிங் சென்றபோது கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்ட மணிமேகலை உசைன் தம்பதியை அந்த கிராம மக்கள் பாசத்துடன் அரவணைப்புடன் இருந்து பார்த்துக்கொண்டனர்.
அங்கேயே இரண்டு மூன்று மாதங்கள் தங்கியதால் அனைவரும் நண்பர்களாகிவிட்டனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களுடன் சென்று மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்டு வரும் மணிமகேலை தற்போது தீபாவளி கிராமத்தில் கொண்டாட அங்கு சென்றுள்ளனர். அவர்களுக்காக ரூ. 1 லட்சத்துக்கு பட்டாசுகள் வாங்கி கொடுத்து செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். மணிமகேலை உசைன் தம்பதியின் நம்ம மனதை பலரும் பாராட்டி வருகின்றனர்.