ஓட்டல்களில் ‘ஜெய்பீம்’: திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம்!

செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:29 IST)
சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் நேற்று இரவு அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சூர்யா ரசிகர்கள் சிலர் சேலத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் இந்த படத்தை திரையிட முயற்சி செய்ததாகவும் அந்த முயற்சி தடுக்கப்பட்டதாகும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த செய்திக்கு திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். நீதி நேர்மை நியாயம் பேசும் சூர்யா தனது ரசிகர்களின் இந்த செயலை கண்டிக்காமல் விட்டதற்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாகவும் ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படத்தை பொதுவெளியில் திரையிடுவது குற்றம் என்பது சூர்யா ரசிகர்களுக்கு தெரியாதா என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்