கிராமத்து நண்பர்களுக்கு தீபாளி ட்ரஸ் Shopping - மணிமேகலை உசைனை பாராட்டும் ரசிகர்கள்!

திங்கள், 1 நவம்பர் 2021 (19:20 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் கணவருடன் தனியாக வசித்து வருகிறார். தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார். கொரோன லாக்டவுன் சமயத்தில் ஷட்டிங் சென்றபோது கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்ட மணிமேகலை உசைன் தம்பதியை அந்த கிராம மக்கள் பாசத்துடன் அரவணைப்புடன் இருந்து பார்த்துக்கொண்டனர். 
 
அங்கேயே இரண்டு மூன்று மாதங்கள் தங்கியதால் அனைவரும் நண்பர்களாகிவிட்டனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களுடன் சென்று மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்டு வரும் மணிமகேலை தற்போது தீபாவளி முன்னிட்டு அவர்களை அழைத்து வந்து ட்ரஸ் எடுத்து கொடுத்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பலரது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்