அண்ணாத்த புரமோஷன் நிகழ்ச்சி: சன் டிவி ஏற்பாடு!

செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:43 IST)
அண்ணாத்த புரமோஷன் நிகழ்ச்சி: சன் டிவி ஏற்பாடு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றை சன் டிவி ஏற்பாடு செய்துள்ளது
 
இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் டி இமான், இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களான குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி,சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பதும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமாட்டார் என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த புரமோஷன் நிகழ்ச்சி வரும் தீபாவளி அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்