தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.
அந்தவகையில் தொகுப்பாளினி மணிமேகலை வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இதனால் சென்னை திரும்ப முடியாமல் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளார். அங்கிருந்த படியே கிராம குழந்தைகளுடன் விளையாடுவது , முறுக்கு சுடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது கிராமத்தில் உள்ள சின்ன பையன்களிடம் தான் ஒரு நடன புயல் என்று கூறி ஏமாற்றி தனுஷின் புதுப்பேட்டை படத்தில் இடம்பெறும் வரியா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.