தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது. இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பினார்.
பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். தற்போது தனது உடல் எடையை குறைத்து கட்டான உடல் தோற்றத்தை பெற கடந்த சில நாட்களாக கடுமையாக முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நமீதா செம கவர்ச்சியான உடையில் வந்து அந்த செட்டை குஷியாக்கிவிட்டார்.