இயக்குநர் மணிரத்னம், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். இந்நிலைய்ல் தக்லைப் படத்திற்கு பின் அவரது அடுத்த படத்திற்கான திட்டங்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இந்த முறை அவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் ஒரு ரொமான்ஸ் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படம் தொடர்பான ஆரம்பக்கட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கதையமைப்பும், நடிகர் தேர்வும் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மணிரத்னம் முன்னதாக "பொன்னியின் செல்வன்" போன்ற வரலாற்றுப் பிரமாண்டங்களை இயக்கி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர். தற்போது அவர் எடுக்கவுள்ள புதிய படத்தின் கதை நவீன காதல் கதை என்றும், இந்த படத்தில் நவீன் பொலிஷெட்டி நாயகனாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் என்பதால், இது தென்னிந்திய அளவில் ஒரு பெரிய ப்ளான் ஆகும் என கூறப்படுகிறது. மற்ற மொழிகளிலும் பின்னர் டப்பிங் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.