சாந்தகுமார் படக்குழு மீது புகார் அளித்த மணிரத்னம்… பின்னணி என்ன?

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (17:38 IST)
இயக்குனர் சாந்தகுமார், மௌனகுரு மற்றும் மகாமுனி ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார்.

மௌனகுரு படத்துக்கு பிறகு சாந்தகுமார் 8 ஆண்டுகள் கழித்து இயக்கியப் படம் என்பதால் மகாமுனி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரிலிஸான போது அதன் திரைக்கதை தொய்வு காரணமாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் ரிலிஸுக்கு பின்னர் படக்குழு பல விருது விழாக்களுக்கு அனுப்பி வருகின்றனர். படத்தில் நடித்த ஆர்யாவுக்கு சில திரைப்பட விழாக்களில் விருதுகளும் கிடைத்தன.

இந்நிலையில் இப்போது சாந்தகுமார் அடுத்து இயக்கும் படத்தில் கைதி புகழ் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் ஜி எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்து வந்த நிலையில், ஷூட்டிங் நடந்த இடத்துக்கு அருகில் இருந்த இயக்குனர் மணிரத்னத்தின் கெஸ்ட் அவுஸுக்கு இடையூறாக இருந்த நிலையில் அங்கு தங்கியிருந்த மணிரத்னம் போலீஸாரிடம் புகாரளிக்க, அவர்கள் வந்து படப்பிடிப்பு இடத்தில் இருந்து சாந்தகுமார் குழுவினரை அகற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்