விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் – அதிகரிக்கும் ரசிகர்களின் ஆபாச பதிவுகள்!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (11:55 IST)
நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் நடிப்பதற்கு எதிராக ரசிகர்கள் அழுத்தம் தந்து வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறான “800” படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று விஜய் சேதுபதியை படத்திலிருந்து விலகி கொள்ள அறிவுறுத்தி முரளிதரன் வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்து “நன்றி.. வணக்கம்” என கூறியிருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் நினைவஞ்சலியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “நன்றி வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம். இனி அதை பற்றி பேசுவதால் எந்த பயனும் இல்லை.. விடுங்க” என விரக்தியாய் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் இருக்கும் சில விஷமிகளின் பதிவுகள் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கின்றன. இது சம்மந்தமாக ஒருவர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் விதமாக வெளியான பதிவு அனைவருக்கும் ஆத்திரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்