பாலியல் குற்றச்சாட்டு: பிரபல மலையாள நடிகர் முகேஷ் கைது!

Mahendran
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (15:29 IST)
பிரபல மலையாள நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மலையாள திரையுலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின்னர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் பிரபல நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்த நிலையில், சில நடிகைகள் தாங்களாகவே முன்வந்து புகார்களை அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், மலையாள திரையுலகின் பிரபல நடிகரான முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 3 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, விசாரணைக்கு பின்னர் முகேஷ் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் முகேஷ் ஏற்கனவே முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். சில நிபந்தனைகளுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்