இடைவேளையை முடித்துகொண்டு மீண்டும் சோஷியல் மீடியாவுக்கு வந்த மாளவிகா மோகனன்!

புதன், 2 ஜூன் 2021 (15:10 IST)
நடிகை மாளவிகா மோகனன் தனது புதிய புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இப்போது தனுஷின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பகிர்வதை நிறுத்தியிருந்த அவர் இப்போது மீண்டும் புகைப்படங்களை பகிர ஆரம்பித்துள்ளார். தனது ட்ரேட் மார்க் கவர்ச்சியுடன் இருக்கும் புகைப்படத்தோடு தொடங்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்