கார்த்தியின் அடுத்த படத்தில் ‘மாஸ்டர்’ நாயகி?

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (21:45 IST)
கார்த்தி நடிப்பில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘தேவ்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்தது. இந்த படத்தால் பல கோடி நஷ்டம் அடைந்ததாகவும், அதனால் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக இன்னொரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கார்த்தி வாக்களித்திருந்தார் என்றும் கூறப்பட்டது.
 
அந்த வாக்கின் படி தற்போது தற்போது புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
முந்தைய இரண்டு படங்கள் போலவே இந்த படத்திலும் டெக்னாலஜி சம்பந்தமான குற்றங்கள் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்