இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தவர் சோனு சூட். கொரோனா காலத்தில் ஏராளமாக மக்களுக்கு போக்குவரத்து உதவிகளை செய்ததன் மூலம் நற்பெயரை ஈட்டினார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருந்துகளை ஏற்பாடு செய்து பெரும் அளவிலான உதவிகளை செய்தார். இதனால் அவரை அவர் பிறந்த மாநிலமான பஞ்சாப் மாநில ஐகானாக பஞ்சாப் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் அளவுக்கு அவர் புகழ் பரவியது.
இந்நிலையில் பஞ்சாப்பின் லூதியானா மாவட்ட நீதிமன்றம் சோனு சூட்டுக்கு எதிராக கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது. அந்த நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக 10 லட்ச ரூபாய் மோசடி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆஜராக பல முறை சம்மன் அளிக்கப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. அதனால் அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட்டைப் பிறப்பித்துள்ளது.