வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (15:31 IST)
வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை மறுநாள் நடக்க உள்ளது.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 

இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில்  பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ள தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவைக் கலந்துகொள்ள சொல்லி தயாரிப்பு தில் ராஜு சிறப்பு அழைப்பிதழ் வெளியிட்டுள்ளாராம். அதனால் அவர் கலந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்