கைதி போல பாடல் இல்லாத விஜய் தேவரகொண்டாவின் படம்… இசை அனிருத்!

vinoth

ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (14:30 IST)
தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் அவர் நடித்த குஷி திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

இதையடுத்து கடந்த மாதம் ரிலீஸான பேமிலி ஸ்டார் படமும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் கிரிஞ்சாக இருப்பதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கழுவி ஊற்றினர்.

இந்த படத்தால் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா அடுத்து கௌதம் இயக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் படத்தில் பாடல்களே இல்லாமல் உருவாக்கப் போகிறார்களாம். விறுவிறுப்பான இந்த கதைக்கு பாடல்கள் தேவைப் படாததால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்