பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம்?..! ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு...!!

வியாழன், 4 ஜனவரி 2024 (10:13 IST)
திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலிஅறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என்று கூறி பாஜக மாநில நிர்வாகியான சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் அளித்தார்.
ALSO READ: 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத மோசமான சாதனையைப் படைத்த இந்திய அணி!
அந்த புகார் தொடர்பாக பதில் அளிக்கும்படி முரசொலி அறக்கட்டளைக்கு அந்த ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
 
நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும்,தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்ஏஆர்எல் சுந்தரேசனும் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து முரசொலி அறக்கட்டளை நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்