ஸ்ரீதேவி ஆரம்பித்ததை முடித்து வைக்கின்றார் மாதுரி தீட்சித்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (17:53 IST)
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவு இந்திய திரையுலகையே ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் பிசியாக நடிக்க தொடங்கிய நேரத்தில் திடீரென அவர் மரணம் அடைந்தது அவரது ரசிகர்களுக்கு பேரிழப்பாகும்

இந்த நிலையில் ஸ்ரீதேவி நடிப்பில் ஒரு படத்தை அபிஷேக் வர்மா என்பவர் இயக்கி வந்தார். இந்த படம் பாதியில் இருக்கும்போதே திடீரென அவர் மரணம் அடைந்துவிட்டதால், இந்த படத்தை எப்படி முடிப்பது என்ற அதிர்ச்சியில் இருந்து அவர் பல நாட்களாக மீளவில்லையாம்

இந்த நிலையில் ஸ்ரீதேவி பாதி நடித்த இந்த படத்தில் மீதியை முடித்து கொடுக்க பிரபல நடிகை மாதுரி தீட்சித் ஒப்புக்கொண்டுள்ளாராம். இதனையறிந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், மாதுரிக்கு நன்றி தெரிவித்துள்ளார். நானும் எனது அப்பாவும், தங்கையும் உங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம்' என்று ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்