லிங்குசாமி படத்தில் மாதவன்… ஆனால் ஹீரோ இல்லையாம்!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (16:31 IST)
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள தெலுங்கு படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குனர் லிங்குசாமி அதன்பின் ரன், சண்டக்கோழி, பையா உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளார் என்று செய்திகள் ஏற்கனவே வெளிவந்தது .இந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தெனி ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக உப்பேன்னா படத்தில் நடித்திருந்த கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்காக பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சரிவராத நிலையில் இப்போது லிங்குசாமி படங்களில் கதாநாயகனாக நடித்த மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தை மாதவன் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. மாதவன் இதுவரை வில்லனாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்