இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார். இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக லோகேஷ் கனகராஜ் ஒரு வருடமாக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியன் 2 பிரச்சனைகள் நீதிமன்றத்தில் முடியும் நிலையில் உள்ளதால் முதலில் அந்த படத்தை முடிக்கும் மன நிலையில் உள்ளாராம் கமல். அதனால் லோகேஷை அதற்குள் வேறு ஏதாவது படங்கள் இருந்தால் முடித்துவிட்டு வந்து விக்ரம் படத்தை தொடங்கலாம் எனக் கூறியுள்ளாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியான லோகேஷும் தெலுங்கு படத்துக்காக ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமா என்ற யோசனையில் உள்ளாராம்.