பிரதமரை தப்புக் கணக்கு போட்டாங்க.. ஆனா எல்லாம் மாறிட்டு! – நடிகர் மாதவன் புகழாரம்!

வெள்ளி, 20 மே 2022 (14:57 IST)
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் மாதவன், பிரதமர் மோடி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் தொடங்கி பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான், மாதவன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் மாதவன் நடித்து இயக்கியுள்ள “ராக்கெட்ரி” படம் திரையிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மாதவன் “பிரதமர் மோடி டிஜிட்டல் பொருளாதாரத்தை அறிமுகம் செய்தபோது பேரழிவாக அமையும் என நிபுணர்கள் எச்சரித்தனர். ஆனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு கதையே மாறிவிட்டது. பொருளாதார தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்