கேன்ஸ் விழாவில் இந்திய கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு… வைரல் புகைப்படங்கள்!

புதன், 18 மே 2022 (10:06 IST)
நேற்று தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமா கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா உலக அளவில் பிரபலமாக உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டு கேன்ஸ் 75வது சர்வதேச திரைப்பட கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் இந்தியாவில் இருந்து மாதவன் இயக்கிய ராக்கெட்ரி, பார்த்திபனின் இரவின் நிழல், ஏ.ஆர்.ரகுமானின் லெ மஸ்க் உள்ளிட்ட பல படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில் இந்தியா சார்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் திரைப்பிரபலங்கள் ஏ.ஆர்.ரகுமான், நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இன்று இந்திய கலைஞர்களான கமல்ஹாசன், ரஹ்மான் மற்றும் மாதவன் உள்ளிட்டோருக்கு கேன்ஸ் விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். கேன்ஸ் விழாவில் கமல், ரஹ்மான் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்