இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக காத்திருந்தார் மாதவன். சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படம் இப்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் வரும் மே 19 ஆம் தேதி சிறப்புத் திரையிடலாக திரையிடப்பட உள்ளது. இதுபற்றி பேசியுள்ள இயக்குனர், நடிகர் மாதவன் “நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன்! நான் நம்பி நாராயணனின் கதையை மட்டுமே சொல்ல விரும்பினேன், ஆனால் தற்போது நடப்பதையெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. கடவுளின் கிருபையுடன், நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம், படத்திற்கு நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் பார்க்க நான் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். ஒரு அறிமுக இயக்குநராக, என் அதிக பதட்டத்தை தருகிறது. இப்படம் இந்தியாவை பெருமைப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்!" என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.