‘மாவீரன்’ படப்பிடிப்பு இன்னும் ஒரே ஒரு ஷெட்யூல் தான்: படக்குழு தகவல்!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (16:17 IST)
சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் மூன்று நாட்கள் மட்டுமே இந்த படப்பிடிப்பில் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ‘மாவீரன்’  படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரம் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மொத்தம் 45 நாட்களில் இந்த படத்தை முடிக்க இயக்குனர் மடோன் அஸ்வின்  திட்டமிட்டுள்ளதாகவும் செப்டம்பர் முதல் வாரம் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பு ஒட்டுமொத்தமாக முடித்துவிட்டுதான் அவர் அடுத்த பணியை கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் டிசம்பர் முதல் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று உறுதி
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்