இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படங்கள்… நான்காவது இடத்தில் மாநாடு!

சனி, 27 நவம்பர் 2021 (10:17 IST)
மாநாடு படத்தின் முதல் நாள் வசூல் அனைத்துத் தரப்பினருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்ற நிலையில் அந்த படத்தின் முதல் நாள் வசூலை நேற்று வெளியான சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு வெளியான படங்களில் அண்ணாத்த, மாஸ்டர், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பிறகு மிகப்பெரிய ஓபனிங் மாநாடு படத்துக்குதான் கிடைத்துள்ளதாம். கடந்த 10 ஆண்டுகளில் வெற்றியேக் காணாத சிம்புவுக்கு இந்த படம் ஒரு மைல் கல்லாக அமையும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்