மாநாடு படத்தை தடை செய்ய வேண்டும்-வேலூர் இப்ராஹும்

சனி, 27 நவம்பர் 2021 (16:11 IST)
வன்முறை காட்சிகளைத் துண்டும் விதமாக உள்ள மாநாடு படத்தை தடை செய்ய வேண்டும் என  பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹும் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு எஸ்.ஜே,சூர்யா நடிப்பில் நேற்று முன் தினம் வெளியான படம் மாநாடு. இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

இப்படம் இந்து- முஸ்லீன் ஒற்றுமையைச் சீர்குலைப்பதாக உள்ளதாகவும் இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் எனவும் பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:

மாநாடு படத்தில் காவல் துறையினரை தீவிரவாதிகள் போல் சித்தரித்துள்ளனர். கோவை குண்டுவெடிப்பு குறித்து தவறான தகவல் பரப்பியுள்ளனர். இப்படம் இந்து- முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக உள்ளது. வன்முறை காட்சிகளைத் துண்டும் விதமாக உள்ள இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் எனவும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்