55 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறேன்… வைரமுத்து பகிர்ந்த நாஸ்டால்ஜியா அனுபவம்!

vinoth
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (12:44 IST)
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் கோலோசிய பாடல் ஆசிரியராக இருந்தவர் வைரமுத்து. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர்.

அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார்.  இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். அடிக்கடி தன்னுடைய மலரும் நினைவுகளை முகநூல் வாயிலாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடையப் பள்ளிக் கால நண்பர்களை சந்தித்து அது சம்மந்தமானப் புகைப்படத்தைப் பகிர்ந்து நாஸ்டால்ஜியாவைப் பகிர்ந்துள்ளார்.

அவரது முகநூல் பதிவில் “கவிஞர் தோட்டம்
55 ஆண்டுகளுக்குப் பிறகு
என் பள்ளித் தோழர்களைப் பார்த்தேன்
அடையாளம் தெரியவில்லை
பலரை
சில தடயங்களைத்
தோண்டித் தோண்டிப்
பழைய முகங்களைக்
கண்டெடுத்தேன்
பாசம்தான்; ஒரு
பந்தம்தான்;
பழைய நினைவுகளின்
பரவசம்தான்
"பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் களித்த தோழர்களே
பறந்து வருகின்றோம் - மீண்டும்
பார்த்து மகிழ்கின்றோம்"
என்று பாடத் துடித்தது மனசு
ஒன்று மட்டும் தோன்றியது
நகர்ப்புற முதுமைக்கும்
கிராமப்புற முதுமைகும்
எட்டிப் பிடிக்க முடியாத
இடைவெளி இருக்கிறது
வாழ்வியல் நெருக்கமோ?
மனவியல் அழுத்தமோ?
காலப்போக்கில்
இந்த வேறுபாடு நீங்கவேண்டும்;
உடல் பராமரிப்பில்
சமநிலை ஓங்கவேண்டும்’ என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்