ஆடம்பர இசை .... . ஒன்றில் கூட தமிழில்லை- கஸ்தூரி டுவீட்

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (13:24 IST)
ஆடம்பர  இசை .... எத்தனையோ வாத்தியங்கள்.... ஒன்றில் கூட  தமிழில்லை அதனால் ஒட்ட முடியவில்லை. என்று ஒரு  பொதுவாக ஒரு பதிவிட்டுள்ளார். இவர்  எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என ஒரு பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில்  முன்னணி இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் நேற்று, வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படத்தில்,  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

உலகத் தமிழர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன்  டிக்கெட் புக்கிங்கிலேயே சாதனை படைத்த  நிலையில்,  ரிலீஸான நேற்று முதல் நாள் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பிரபல  நடிகை கஸ்தூரி, தன் டிவிட்டர் பக்கத்தில் , ஆடம்பரமான விருந்து ...ரகரக உணவு .... ஆனால் ஏனோ ருசிக்கவில்லை... ரசிக்க இயலவில்லை.

ஆடம்பர  இசை .... எத்தனையோ வாத்தியங்கள்.... ஒன்றில் கூட  தமிழில்லை.

அதனால் ஒட்ட முடியவில்லை. என்று ஒரு  பொதுவாக ஒரு பதிவிட்டுள்ளார். இவர்  எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

இந்த நிலையில் , இவர் பொன்னியின் செல்வன் -1 படத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்