மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள லூசிபர் திரைப்படம் வரும் ஏப்ரல் 12ம் தேதி தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியிடப்பட உள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், அரசியல்வாதியாக நடித்துள்ள படம் லூசிபர். மிக மிரட்டலாக, மாஸ் ஹீரோவான மோகன்லால் நடித்துள்ளதால் சேட்டன்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இப்படம் கடந்த மார்ச் 28ம் தேதி மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அழகு தமிழை கொஞ்சி, கொஞ்சி பேசும் சேட்டனான நடிகர் பிரித்விராஜ் தான்இப்படத்தை இயக்கி உள்ளார்.
எம்மா இவருக்குள்ள இப்படி ஒரு இயக்குனர் இருக்குறாரா என எல்லாரையும் வாயை பிளக்க வைத்துவிட்டார் பிரித்விராஜ் சுகுமாறன்.
படம் பக்காவாக போவதைப்பார்த்த தெலுங்கு விநியோகிஸ்தர்கள். லூசிபரை தெலுங்கிலும் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ள லூசிபர் வரும் ஏப்ரல் 12ம் தேதி தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வெளியாக உள்ளது.