வேட்டையன் ரிலீஸாகியும் 100 திரைகளில் ஓடும் லப்பர் பந்து… உண்மையிலேயே கெத்துதான்!

vinoth
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (15:45 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் இதுவரை 30 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. இந்த படம் வெளியான பின்னர் கார்த்தியின் மெய்யழகன் மற்றும் தேவரா போன்ற பெரிய படங்கள் ரிலீஸானாலும் இன்னமும் இந்த படத்துக்குக் கூட்டம் குறையவில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களை இந்த படம் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸான பின்னரும் கூட லப்பர் பந்து படம் இன்னும் 100 திரைகளில் ஓடிவருகிறது என்று சொல்லப்படுகிறது. வேட்டையன் படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வருவதால் இன்னும் சில நாட்கள் கூட லப்பர் பந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்