இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மே 23 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதையடுத்து சென்னையில் நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. அதில் நடிகர் சசிகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “இந்த நிகழ்ச்சிக்கு முதலில் இயக்குனர் அன்பு என்னை அழைத்தார். நான் என்னுடைய படங்களின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகள் தவிர வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என்று சொல்லிவிட்டேன். அவர் உடனே சண்முகபாண்டியனை விட்டு எனக்கு ஃபோன் செய்ய சொன்னார். அவர் ஃபோன் செய்தவுடனேயே நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். விஜயகாந்த் சார் இருந்தா வாங்கன்னு உரிமையாக் கூப்பிடுவார். ஆனால் சண்முக பாண்டியன் என்னைக் கூப்பிடும் முன்பே நான் வருவதாக சொல்லிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.