நடிகர் விஷால்-வரலட்சுமி காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலும், சரத்குமாரும் மோதிக் கொண்டபோதும் வரலட்சுமி காதலில் உறுதியாக இருந்தார். காதலித்தாலும் அவர்களின் திருமணம் பற்றி பேசாமல் இருந்தனர்.
நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமாரை சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அவர்களின் காதல் முறிந்துவிட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் வரலட்சுமி கடந்த 28ம் தேதி ட்விட்டரில் காதல் முறிவை பற்றி பதிவிட்டார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருந்ததாவது, காதல் முறிவுகள் தரம் தாழ்ந்துள்ளன. ஒரு ஆண் தனது மேனேஜர் மூலம் 7 ஆண்டு கால காதலை முறித்துள்ளார்...காதல் எங்கே? என்றார்.
இதன் மூலமாக வரலட்சுமியின் ட்வீட்டை பார்த்தவர்கள் விஷால்தான் தனது மேனேஜரை தூது விட்டு வரலட்சுமியுடனான காதலை முறித்துக் கொண்டார் என்றும், அந்த வெறுப்பை வரலட்சுமி ட்விட்டரில் கூறியுள்ளார் எனவும் பேசப்படுகிறது.