நயன்தாரா நடித்த 2 படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (22:55 IST)
தல அஜித்துடன் நயன்தாரா கதாநாயகியாக நடித்த விஸ்வாசம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து கொலையுதிர் காலம், ஐரா, மிஸ்டர் லோக்கல், தளபதி 63 போன்ற தமிழ் படங்களில் அவர் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் ' லவ் ஆக்சன் ட்ராமா ' என்ற மலையாள படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த நிலையில் ' லவ் ஆக்சன் ட்ராமா ' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது.

நிவின்பாலி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள  ' லவ் ஆக்சன் ட்ராமா '  படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தியான் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளியாக உள்ள ' லவ் ஆக்சன் ட்ராமா ' படத்தில் நிவின்பாலி, நயன்தாரா, துர்கா கிருஷ்ணா, பேசில் ஜோசெப் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் விவேக் ஹர்ஷன்  படத்தொகுப்பாளராக உள்ளார் மற்றும் பிரதீஷ் வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதேபோல் கடந்த ஆண்டு நயன்தாரா நடித்த வெற்றிப்படங்களில் ஒன்று 'இமைக்கா நொடிகள்'. விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இந்த படம் தமிழில் சூப்பர் ஹிட்டாகிய நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படம் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்