அவரை வணங்கணுமா? ஆமா ஏன்னா அவர் ராஜா! – தல தோனி குறித்து லோகேஷ் கனகராஜ் ட்வீட்!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (11:58 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தோற்ற நிலையில் கேப்டன் தோனி குறித்து பலரும் கிண்டலடித்து வரும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

நேற்று சன்ரைஸர்ஸ் அணியுடன் மோதிய சிஎஸ்கே அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நேற்றைய ஆட்டத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிஎஸ்கே அணி தோல்வியை தழுவுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பலர் சிஎஸ்கேவை, அணி கேப்டன் தோனியை கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக பலரும் பதிவிட்டு வரும் நிலையில் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தோனி நேற்று மைதானத்தில் விளையாட முடியாமல் மண்டியிட்டு நின்ற புகைப்படத்தை பதிவிட்டு மார்வெல் அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் “அவரை நாம் வணங்க வேண்டுமா?” என ப்ரூஸ் பேனர் கேட்க “ஆமா.. ஏன்னா அவர் ராஜா!” என ரோடி சொல்லும் வசனத்தை பதிவிட்டுள்ளார். அதேபோல பலர் பேட்ட படத்தில் ரஜினி சொல்லும் “நான் வீழ்வேனென்று நினைத்தாயொ?” என்ற வசனத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்